சமந்தா திருமணம்: 150 பேர் கலந்து கொள்ளும் திருமணத்தின் செலவு ரூ.10 கோடி
பிரபல நடிகை சமந்தாவின் திருமணம் வரும் அக்டோபர் 6 மற்றும் 7ஆகிய தேதிகளில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனன் – அமலா தம்பதியின் மகன் நாகசைதன்யாவை காதலித்த சமந்தா தற்போது திருமணம் செய்து கொள்ளவுள்ளார்
வரும் 6ஆம் தேதி இந்து முறைப்படியும் 7ஆம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் நடைபெறவுள்ள இந்த திருமணத்திற்கு முக்கிய விருந்தாளிகள் 150 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த திருமணம் ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
பிரபல தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநில அரசியல்வாதிகள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.