டாடா டொகோமா மூடப்படுகிறதா?

டாடா டொகோமா மூடப்படுகிறதா?

கடந்த 21 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு துறை சேவையில் ஈடுபட்டு வந்த டாடா டொகோமா நிறுவனம் தனது சேவையை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 1996ஆம் ஆண்டு லேண்ட்லைன் சேவையுடன் தொடங்கப்பட்ட டாடா தொலைத்தொடர்பு நிறுவனம் பின்னர் செல்போன் சேவையிலும் ஈடுபட்டது.

ஆனால் பெருகி வரும் போட்டி, அதிகளவிலான இலவசம் ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட டாடா நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் லேண்ட்லைன் சேவை தொடரும் என்றும் செல்போன் சேவை மட்டுமே மூடப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

தற்போதைய டாடா டொகோமா வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களை மாற்றாமல் வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளும் வசதி கிடைக்குமா? என்பது உள்பட பல கேள்விகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply