ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டி இல்லை: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டி இல்லை: விஜயகாந்த்

சென்னை ஆர்கே நகர் தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்ற பெருமையை பெற்றது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இந்த தொகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில்போட்டியிட்ட தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் உள்பட பல முறைகேடுகளில் ஈடுபட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் இந்த தொகுதியில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிகக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தோல்வி அடைந்ததால் அவர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறின. ஆனால் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளிடம் உடல்நலம் விசாரிக்க வந்த விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்றும் இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகத்திற்கு பொதுத்தேர்தலே வர வாய்ப்பு இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply