கட்சி அறிவிப்பை அறிவிக்க முடியாது: கமல்ஹாசனின் குழப்ப டுவீட்

கட்சி அறிவிப்பை அறிவிக்க முடியாது: கமல்ஹாசனின் குழப்ப டுவீட்
நடிகர் கமல்ஹாசன் வரும் நவம்பர் மாதம் கட்சி அறிவிப்பை அறிவிப்பார் என்று இன்று காலை முதல் பல ஊடகங்களில் செய்தி வெளியானது. பின்னர் சிலமணி நேரம் கழித்து கட்சி பெயரை அவர் அறிவிக்க மாட்டார். அதற்கு பதிலாக கமல் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள டுவீட்டில், ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7  இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்’ என்று தெரிவித்துள்ளார்

ஏற்கனவே பிக்பாஸ் முடிந்தவுடன் அவருடைய அரசியல் குரல் குறைந்துவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் இப்போதைக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும், ரஜினி அல்லது விஜய் கட்சி ஆரம்பித்தால் அப்போது அவர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply