எங்கள் குடும்பத்தை கருவியாக பயன்படுத்த வேண்டாம்: பிரியங்கா காந்தி கணவர் எச்சரிக்கை
விரைவில் நடைபெறவுள்ள குஜராத், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் என்னையும் என் குடும்பத்தினர்களையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து அதில் ஆதாயம் தேட வேண்டாம் என பாஜகவினர்களுக்கு பிரியங்கா காந்தியின் கணவரும், சோனியா காந்தியின் மருமகனுமான வதேரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் சிக்கிம் எல்லையான டோக்லாம் பிரச்னையில் சீன தூதரை ராகுல் காந்தி சந்தித்த விவகாரத்தில், தன்னையும், பிரியங்கா காந்தியையும், பாஜக மூத்தத் தலைவர் கிரிராஜ்சிங், புகைப்படங்களை வெட்டி, ஒட்டி வைத்து விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டிய வதேரா, இதுபோன்ற மலிவான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி விரைவில் தீவிர அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென வதேரா அரசியல் கருத்துக்களை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Senior BJP leaders seem to be obsessed with me & my family;they r stalking me on social media &doing a cut/paste of my pictures to tweet1/3 pic.twitter.com/AiDgaA6bvK
— Robert Vadra (@irobertvadra) October 26, 2017