நியூசிலாந்த் வீர்ர்களை சாமியாராக்கி சாதனை செய்த யோகி.!
உத்தரபிரதேச மாநிலம், கான்பூருக்கு மூன்றாவது ஒரு நாள் போட்டிக்காக சென்ற நியூசிலாந்த் வீர்ர்களை, சாமியார் உடை கொடுத்து வரவேற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூசிலாந்து அணி பயிற்சி மேற்கொள்வதற்காக கான்பூர் மைதானத்துக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தீபாவளி முடிந்த பின் வந்ததால், வீரர்களுக்கு தீபாவளி பண்டிகை குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஹோட்டல் முழுக்க அலங்கரிங்கப்பட்டு நிஜமான தீபாவளியே அங்கு கொண்டாடப்பட்டது.
இந்த பண்டிகையில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் காவி நிறத்தில் துண்டுகளும், உடைகளும் கொடுக்கப்பட்டது. மேலும் பொட்டு, மாலை, பூ என எல்லாம் காவி நிறத்தில் தரப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் அனைவரும் சாமியார்கள் போலவே காட்சி அளிக்க ஆரம்பித்தனர். 1000க்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டு அவர்களுக்காக கேக்குகள் வெட்டப்பட்டது.
அதன்பின் அந்த இடத்தில் சிறிய அளவில் ராமாயண நாடகம் நடத்தப்பட்டது. 12 பள்ளி மாணவர்கள் இணைந்து இந்த ராமாயண நாடகத்தை நடத்தினர். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் நடத்திய தீபாவளி பண்டிகையை பார்த்து அது போலவே இந்த வரவேற்பை நடத்த முடிவு செய்ததாக ஹோட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.