தினமும் குஜராத் பயணம்: பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்

தினமும் குஜராத் பயணம்: பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறைந்தது 50 இடங்களில் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும் ஆட்சியை தட்டிப்பறிக்க காங்கிரஸும் போட்டியிடுகின்றன.

கடந்த ஐந்து தேர்தல்களில் வென்றுள்ள பாஜக தங்கள் சாதனைகளைக் கூறி பிரச்சாரம் செய்து 6வது முறை ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படுகிறது.

இதற்காக, 182 தொகுதிகளில் குறைந்தது 150 தொகுதிகளைக் கைப்பற்றும் இலக்கை நிர்ணயித்துள்ளார்களாம். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் குஜராத்தில் பிரச்சாரம் செய்ய வைக்கப்போகிறார்களாம். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யவும் தனி குழுவை உருவாக்கிவிட்டார்களாம்.

இந்நிலையில், அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி தினமும் குஜராத் சென்று பிரச்சாரம் செய்ய செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் மூன்று அல்லது நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்யும் வகையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறதாம். குறைந்தது 50 இடங்களிலும் அதிகபட்சம் 70 இடங்களிலும் மோடி பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply