படுக்கை அறையில் செடிகள் வைத்தால் என்ன ஆகும்? நாசா விஞ்ஞானிகள்
படுக்கை அறையில் செடிகள் வைத்தால் ஜலதோஷம், மாரடைப்பு உள்பட பல வியாதிகள் மனிதனை அண்டாது என்று நாசா மற்றும் அமெரிக்க கல்லூரி ஒன்று கூட்டாக நடத்திய ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கையறையில் செடிகள் இருந்தால் மன அழுத்தம், கோபம் மற்றும் அறையில் உள்ள மாசுக்கள் ஆகியவை குறையும் என்றும் இதனால் மன அமைதி ஏற்படுவதோடு உடலில் ஏற்படும் மாரடைப்பு உள்பட பல நோய்கள் வராது என்றும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
தோட்டத்தில் செடிகள் வளர்ப்பது நல்லது தான் என்றாலும் வீட்டின் உள்ளேயும் ஒருசில வகையான செடிகளை வளர்ப்பது மனிதனின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன