3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 6ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 6ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கான்பூரில் நடந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, விராத் கோஹிலி ஆகியோர்களின் அருமையான சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது

எனவே 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் கடைசி வரை போராடினர். இருப்பினும் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 331 ரன்களே நியூசிலாந்து வீரர்களால் எடுக்க முடிந்ததால் இந்திய அணி 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

 

Leave a Reply