ஜெயலலிதா மரணம்: 15 பேர்களுக்கு நோட்டீஸ்

ஜெயலலிதா மரணம்: 15 பேர்களுக்கு நோட்டீஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஏ.ஆறுமுகச்சாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையம் மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்றுமுதல் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் விசாரணை செய்யும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து 15 பேர்களுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், இந்த 15 பேர்களிடம் இருந்து பதில் வந்தவுடன் ஆணையம் தனது விசாரணையை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது,.

மேலும் இந்த விசாரணை தொடர்பாக விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 20 பேர் கடிதங்கள் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply