நியூயார்க் தீவிரவாத தாக்குதல்: டிரம்பை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த மோடி

நியூயார்க் தீவிரவாத தாக்குதல்: டிரம்பை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த மோடி

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகே பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய் கிழமை அந்த பள்ளியின் அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக மோதினார். மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த திடீர் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். மோடி தனது டுவிட்டரில் ‘இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்’ என கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை போனில் தொடர்பு கொண்டு, தனது இரங்கலை தெரிவித்தார். இது குறித்து வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கையில், இரு நாட்டு தலைவர்களும் உலகளாவிய தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுருந்தது.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே நியூயார்க் தீவிரவாத தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொண்டு பேசினார்.

Leave a Reply