2வது டி-20 போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முண்ட்ரோவின் அபார சதத்தால் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. தவான் ஒரு ரன்னிலும் ரோஹித் சர்மா ஐந்து ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் விராத் கோஹ்லி அபாரமாக அடித்து 65 ரன்கள் எடுத்தார். ஆனாலும் நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகளும் வரும் 7ஆம் தேதி 3வது டி-20 போட்டியில் மோதவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது.