ஆஸ்திரேலியாவில் வகுப்பறைக்குள் புகுந்த கார்: 2 மாணவர்கள் பரிதாப பலி

ஆஸ்திரேலியாவில் வகுப்பறைக்குள் புகுந்த கார்: 2 மாணவர்கள் பரிதாப பலி

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளி வகுப்பறை ஒன்றில் திடீரென கார் ஒன்று உள்ளே புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னியில் பாங்க்சியா ரோட்டில் ஒரு பள்ளியில் நேற்று காலை அங்குள்ள வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அதிவேகமாக வந்த கார் பள்ளிக்குள் நுழைந்தது. பின்னர் உள்ளே தாறுமாறாக ஓடி அங்கிருந்த ஒரு வகுப்பறையில் மோதி புகுந்தது. வகுப்பறை மரத்தினால் உருவாக்கப்பட்டிருந்ததால் கார் வகுப்பறைக்குள் புகுந்து நின்றது.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள் காயம் அடைந்தனர். அனைவரும் வெஸ்ட் மெட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த காரை அதிவேகமாக ஓட்டி வந்தது 52 வயது பெண் டிரைவர் என தெரியவந்தது. அவர் மது போதையில் இருந்தாரா? போதை பொருள் பயன் படுத்தி இருந்தாரா? என போலீசார் பரிசோதித்தனர்.

Leave a Reply