மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச புதிய ஹேஷ்டேக்கை அறிவித்தார் கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் புதிய செயலி ஒன்றை வெளியிட உள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி புதிய செயலியை சென்னை தி.நகாில் நற்பணிமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.
சமூகத்தில் நடைபெறக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக அனைவரிடமும் விவாதிக்க இந்த செயலி பயன்படும் என்று தொடங்கியுள்ளார் கமல். #maiamwhistle, #theditheerpomvaa #virtouscycles #kh என்ற ஹேஷ்டேக்கில் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து அனைவரும் விவாதிக்கலாம் என்று தொவித்துள்ளார்.
மேலும் இந்த ஆப் இத்துடன் நின்று விடாமல் விவாத தளமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், 234 தொகுதிகளிலும் தவறு செய்யாதவர்களுக்கே முன்னுாிமை அளிக்கப்படும். வன்முறை என்பது எந்த மதமானாலும் நிகழக் கூடாது. அனைத்து சமூகத்திலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். இந்துகளை புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணமில்லை. இருப்பினும் இந்து விரோதியாகத்தான் நான் சித்தரிக்கப்படுகின்றேன்.
நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதே எனது கனவு. கனவுகள்தான் உயிர்ப்பிக்கின்றன. தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான். நல்லதை செய்தால் மட்டும் போதாது. நல்ல செயலை சாியான நேரத்தில் சாியான மக்களுக்கு செய்வதே அரசியல் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.