தமிழில் பேசிய மாணவிக்கு ரூ.200 அபராதமா? பொங்கி எழும் தமிழ் ஆர்வலர்கள்
கோவை அருகே உள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் தமிழில் பேசியதற்காக ரூ.200 அபராதம் விதித்ததாக வெளிவந்துள்ள செய்தியால் தமிழ் ஆர்வலர்கள் பொங்கி எழுந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பள்ளியில் தமிழில் பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்து அபராதமும் வசூல் செய்த அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள செட்டிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த அட்டுழியம் நடந்துள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி வகுப்பறையில் தமிழில் பேசியதற்காக வகுப்பாசிரியர் ரூ.200 அபராதம் விதித்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சி தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.