அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார் ரஷ்ய பிரதமர்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார் ரஷ்ய பிரதமர்

அமெரிக்கா தங்களுடைய போட்டி நாடாக இதுவரை இருந்தது, ஆனால் தற்போது எதிரி நாடாக மாறிவிட்டது என்று கூறிய ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் நேற்று அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்து பேசினார்

ஆசியான் அமைப்பு தொடங்கப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவை சமீபத்தில் விமர்சனம் செய்த ரஷ்ய பிரதமர் தற்போது டிரம்ப் மிகவும் வெளிப்படையானவர், நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளதால் இருநாடுகளுக்கு இடையே இணக்கமான சூழல் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது

ந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் லி கெக்கியாங், உள்பட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply