இந்தியா-இலங்கை கிரிக்கெட் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் மழையால் வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு பின்னர் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த 11.5 ஓவர்களில் இந்தியா முன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல், தவான் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். ராகுல், விராத் ரன் ஏதும் அடிக்காமலும் ,தவான் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் மீடியம் வேகப்பந்து வீச்சாளர் லக்மால் இந்த மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். இன்று 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி சுதாரித்து ஆடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்