டிசம்பர் 1-ல் இந்தியா வருகிறார் பராக் ஒபாமா

டிசம்பர் 1-ல் இந்தியா வருகிறார் பராக் ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா வரும் டிசம்பர் 1ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒபாமா பவுண்டேஷன் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா ஒன்றில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக இதற்காக அவர் இந்தியா வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்திய பயணத்தை முடித்து கொண்டு அதன் பின்னர் ஜெர்மனி, இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் இந்த ஆண்டு, ஒபாமா பயணம் செய்ய உள்ளார். இதற்குமுன் முன்னாள் அதிபர் ஓபாமா, மூன்று நாள் பயணமாக கடந்த 2015ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply