சசிகலாவை அடுத்து அவரது கணவர் நடராஜனுக்கு ஜெயில்: சென்னை ஐகோர்ட் அதிரடி

சசிகலாவை அடுத்து அவரது கணவர் நடராஜனுக்கு ஜெயில்: சென்னை ஐகோர்ட் அதிரடி

கடந்த 1994ஆம் ஆண்டு லண்டனில் இருந்து போலி ஆவணங்கள் மூலம், தமிழரசி பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தின் பெயரில் நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் சொகுசு கார் ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். அதன்மூலம் ரூ.1.84 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. வழக்கில் நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதன்மூலம் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் ஆகிய இருவரும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply