தீபிகா, பன்சாலி தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு: பாஜக பிரமுகரின் சர்ச்சை அறிவிப்பு
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்திற்கு கடந்த சில நாட்களாகவே எதிர்ப்புகள் வலுத்து வருவதால் வரும் டிசம்பர் 1ஆம் திட்டமிட்டபடி இந்த படம் வருமா? என்ற சந்தேகம் வலுத்து வருகின்றது.
இந்த நிலையில் பத்மாவதி படத்தில் ராணிபத்மினியாக நடித்த தீபிகாவின் தலையையும், இந்த படத்தின் இயக்குனர் பன்சாலியின் தலையையும் வெட்டி கொண்டு வந்தால் ரூ.10 கோடி பரிசளிப்பதாக ஹரியானா மாநில பாஜக மூத்த தலைவர் சூரஜ்பால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில்ராணி பத்மினியை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளதாக சில கட்சிகள் அமைப்புகள் குற்றாஞ்சாட்டி வரும் நிலையில் படக்குழுவினர் இந்த குற்றச்சாடை மறுத்து வருகின்றனர்.