அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மீது 4 பெண்கள் பாலியல் புகார்
அமெரிக்க முன்னாள் அதிபர் ((Bill Clinton)) பில் கிளிண்டனுக்கு எதிராக புதிதாக 4 பெண்கள் பாலியல் தொந்தரவு வழக்கு தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ((Daily Mail)) டெய்லி மெயில் மற்றும் ((The Telegraph)) தி டெலிகிராஃப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள இது தொடர்பான செய்தியில், பில் கிளிண்டனின் அதிபர் பதவிக்காலம் முடிந்த பிறகு தொழிலதிபர் ((Ron Burkle)) ரான் பர்கிள்-இன் வியாபார விஷயங்களில் அவருக்கு உதவுவதற்காக, 2000 ஆவது ஆண்டுகளில் ஒரு சொகுசு விமானத்தில் சில இளம் பெண்களுடன் பயணித்தபோது பாலியல் தொந்தரவு சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப் பட்ட 4 பெண்கள் யார், யார்? என்பது தெரியாத நிலையிலும் அவர்கள் தனித்தனியாக பில் கிளிண்டனுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், வெள்ளை மாளிகையில் பணியாற்றிய ((Monica Lewinsky)) மோனிகா லெவின்ஸ்கி 1998 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் மீது தொடுத்த பாலியல் புகார் உலக அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத் தக்கது