96 வருட சாதனையை தகர்த்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்
கிரிக்கெட் உலகில் செய்யப்பட்டிருந்த சாதனை ஒன்றை 96 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் தகர்த்துள்ளார். அதாவது 200 பந்துகளுக்குள் 300 ரன்கள் அடித்து அவர் சாதனை செய்துள்ளார்.
இந்த சாதனையை செய்து உலக அளவில் பிரபலமான அந்த வீரர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்கோ மராசிஸ் என்பவர். தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் அவர் 191 பந்துகளில் 300 ரன்கள் அடித்துள்ளார். இவற்றில் 13 சிக்சர்கள் மற்றும் 35 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் கடந்த 1921ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் சார்லஸ் என்பவர் 221 பந்துகளில் 300 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது
300* in 1 session and a half 🙌🏾🙌🏾🙌🏾 special knock Marco Marais 👊🏾 #forthelads #whoisthisguy🤷🏽♂️ #EpvBears pic.twitter.com/UuzsQI5zl1
— Somila Seyibokwe (@seyibokwe) November 23, 2017