இளைஞரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 263 நாணயங்கள்

இளைஞரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 263 நாணயங்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞருக்கு திடீரென கடும் வயிற்று வலி வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவருடைய வயிற்றில் நூற்றுக்கணக்கான சில்லறை காசுகள் மற்றும் சில பொருட்கள் இருந்தன

உடனடியாக அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்து 263 நாணயங்கள், நகங்கள், ஊசிகள், இரும்பு செயின்கள் ஆகிய பொருட்கள் இருந்தன. இவற்றின் மொத்த எடை ஒரு கிலோவுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரெய்வா அவர்கள் கூறியபோது, ‘இந்த பொருட்களை அந்த இளைஞர் தனது ஆறாவது மாதத்தில் இருந்து விழுங்கப்பட்டவையாக இருக்கலாம் என்று கூறினார்.

Leave a Reply