கழுதைகளை சிறையில் அடைத்த உபி போலீசார்

கழுதைகளை சிறையில் அடைத்த உபி போலீசார்

குற்றம் செய்யும் மனிதர்களை மட்டுமே சிறையில் அடைக்கும் வழக்கம் இதுவரை இருந்த நிலையில் உபி போலீசார் எட்டு கழுதைகளை நான்கு நாட்கள் சிறை வைத்துள்ளனர்.

உபி மாநிலம் ஜலாவூன் மாவட்டத்தில் உள்ள உராய் என்ற சிறை வளாகத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் வளர்க்கப்பட்டன. சிறை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்களை அப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த 8 கழுதைகள் தின்று அதனை நாசம் செய்துவிட்டன. இதன் காரணமாக, கடந்த 24ம் தேதி அந்த 8 கழுதைகளை ஜலாவூன் மாவட்ட போலீசார் கைது செய்து உராய் சிறையில் அடைத்துள்ளார்.

இந்த நிலையில், தனது கழுதைகளை காணாத கமலேஷ் என்பவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக யாரோ ஒருவர் மூலம் அறிந்து கொண்டு உராய் சிறை நிர்வாகத்திடம் கழுதைகளை விடுவிக்கக் கோரி முறையிட்டுள்ளார். ஆனால், அதனை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. இதையடுத்து, பாஜகவின் உள்ளூர் பிரமுகர் சக்தி காகோயின் உதவியை நாடியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது உதவியுடன் காவல் நிலையம் சென்று தன்னுடைய கழுதைகளை கமலேஷ் மீட்டுள்ளார். கிட்டத்தட்ட 4 நாட்களுக்குப் பிறகு போலீசார் கமலேஷின் கழுதைகளை விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply