இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தவுடன் வரும் டிசம்பர் 10 முதல் இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விராத்கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டன் ஆகிறார்.
இந்திய அணி வீரர்களின் விபரங்கள்: 1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. தவான், 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. மணீஷ் பாண்டே, 6. கேதர் ஜாதவ், 7. தினேஷ் கார்த்திக், 8. டோனி, 9. ஹர்திக் பாண்டியா, 10. அக்சார் பட்டேல், 11. குல்தீப் யாதவ், 12. சாஹல், 13. பும்ரா, 14. புவனேஸ்வர் குமார். 15. சிதார்த் கவுல்.