ஆர்.கே.நகரில் யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகரில் யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

அதிமுக மற்றும் தினகரன் தரப்பு வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருதுகணேஷ் ஏற்கனவே பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். மேலும் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட விஜயகாந்தின் தேமுதிக, யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என்றும், தன்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் ஆர்.கே. நகரில் விதிக்கப்பட்ட பரப்புரை கட்டுப்பாடுகளை பணப்பட்டுவாடா செய்பவர்களே விமர்சிப்பார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply