ராணுவ தர நிர்ணய மையத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு வேலை
ராணுவத்திற்கு சொந்தமான தர நிர்ணய “Quality Assurance” மையத்தில் காலியாக பையர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 14க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fireman
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,000 – 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fighting-ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதித் தேர்வு:
உயரம்: 165 செ.மீ
மார்பளவு: 81.5 செ.மீ
விரிவடைந்த நிலையில் 86 செ.மீ
எடை: 50 கிலோ
உடற்திறன் தேர்வு விவரம்: 63.5 கிலோ எடைக்கொண்ட ஒரு மனிதனை தூக்கிக் கொண்டு 95 நொடிக்குள் 183 மீட்டர் தூரம் ஓடிக்கடக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3 மீட்டர் தூரம் ஏறி கடக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/writeReadData/ADS/eng_10203_11_0050_1718b.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The SQAO, Senior Quality Assurance Esatablishment(Armts), Armapore Post, Kanpur – 208 009(U.P)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.12.2017
மேலும் முழுமையான விவரங்கள் மேற்கண்ட இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.