மரணம் அடைந்தது சசிகபூரா? சசிதரூரா? நெட்டிசன்கள் குழப்பம்

மரணம் அடைந்தது சசிகபூரா? சசிதரூரா? நெட்டிசன்கள் குழப்பம்

வழக்கமாக அரசியல்வாதிகள், நடிகர்கள் ஆகியோர்கள் தான் சொதப்பலாக ஏதாவது உளறுவார்கள், அவர்களை நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். ஆனால் நேற்று நெட்டிசன்களே குழப்பத்தில் உளறியிருக்கின்றார்கள், அவர்களை யார் கலாய்ப்பது என்றுதான் தெரியவில்லை

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சசிகபூர் நேற்று காலமானார். அவருக்கு இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நெட்டிசன்களில் ஒருசிலர் மரணம் அடைந்தது நடிகர் சசிகபூர் என்று கூறுவதற்கு பதிலாக, தவறுதலாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான சசிதரூருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சசி தரூர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இறந்தது நடிகர் சசிகபூர் எனவும் தான் இறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்து குழப்பத்தில் இருந்த நெட்டிசன்களை தெளிய வைத்தார்

Leave a Reply