போட்டியில் தோற்றதால் நாயை துணி துவைப்பது போல் துவைத்த கொடூர நபர்

போட்டியில் தோற்றதால் நாயை துணி துவைப்பது போல் துவைத்த கொடூர நபர்

கடந்த சில மணி நேரமாக இணையத்தில் சீன நபர் ஒருவர் நாய் ஒன்றை துணி துவைப்பது போல் துவைத்து கொலை செய்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் சீனாவில் நடந்த நாய் ஓட்டப்போட்டி ஒன்றில் இந்த நாய் மீது அதிக பணம் கட்டிய ஒருவர், அந்த நாய் போட்டியில் தோற்றதால் கடும் ஆத்திரமடைந்தாராம்.

இதனையடுத்து அந்த நாயை பாத்ரூம் ஒன்றில் தூக்கி சென்ற அவர் துணி துவைப்பது போல் மூன்று முறை அதன் இரண்டு கால்களையும் தரையில் போட்டு அடித்தார். இதில் நாயின் தலை சிதறி பரிதாபமாக இறந்தது.

மேலும் நாயை கொலை செய்த அந்த நபர், அந்த நாயை சமையல் செய்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a Reply