சூடான் நாட்டில் டவுசர் அணிந்த 24 இளம்பெண்கள் கைது

சூடான் நாட்டில் டவுசர் அணிந்த 24 இளம்பெண்கள் கைது

சூடான் நாட்டில் பெண்கள் நாகரீகமாக உடையணிய அனுமதி உண்டு, ஆனால் ஆபாசமான உடைகள் அணிந்தால் அந்நாட்டு சட்டப்படி தண்டனைக்குள்ளாவார்கள். இந்த நிலையில் நேற்று அந்நாட்டில் நடந்த பார்ட்டி ஒன்று டவுசர் அணிந்து பார்ட்டியில் கலந்து கொண்ட 24 இளம்பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சூடான் தலைநகர் கார்ட்டொம் நகரில் நடந்த இந்த விழாவில் பெண்கள் ஆபாசமாக உடையணிந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்நாட்டு போலீசார் அதிரடியாக பார்ட்டி நடந்த இடத்திற்குள் நுழைந்து டவுசர் அணிந்திருந்த 24 பெண்களை கைது செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட பெண்கள் உடை விஷயத்திற்காக மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply