ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டீராய்டு மருந்துகள் காரணமா? அக்குபஞ்சர் மருத்துவர் பேட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகளும், ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டிய நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று அக்குபஞ்சர் மருத்துவர் விசாரணை கமிஷன் முன் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் ஜெயலலிதாவுக்கு கொடுத்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம்’ என்று கூறினார். மேலும் 2016 சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளித்தேன். அதனால் கால் வீக்கங்கள் குறைந்து நன்றாக நடந்தார். ஆனால் ஜெயலலிதாவை அப்பலோவில் அனுமதித்தபின் சந்திக்க முயற்சித்தேன், முடியவில்லை’ என்று கூறினார்.