லேட்டாக வாழ்த்தினாலும் லேட்டஸ்ட்டாக வாழ்த்திய கமல்

லேட்டாக வாழ்த்தினாலும் லேட்டஸ்ட்டாக வாழ்த்திய கமல்

தமிழ் திரையுலகில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளாக சிறந்த நண்பர்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது 67வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்த தினமே முடியுந்தருவாயில் ரஜினிக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நேற்றிரவு கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாரதியின் படத்தை டிபியாக பயன்படுத்தி வரும் கமல், பாரதி பிறந்த நாளை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Leave a Reply