தமாக எந்த கூட்டணியில் உள்ளது? ஜி.கே.வாசன் விளக்கம்
கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது மக்கள் நலக்கூட்டணி உடைந்துவிட்ட நிலையில் தமாக எந்த கூட்டணியில் உள்ளது என்பது குறித்த சந்தேகத்திற்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் விளக்கமளித்துள்ளார்.
தற்போது த.மா.கா யாருடனும் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் வரும் போது மக்கள் மனநிலை புரிந்து கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்றும் ஜி.கே.வாசன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது கட்சி எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,.
இப்போதைக்கு தமாக, திமுக கூட்டணியை மட்டுமே விரும்புவதாகவும், வரும் 2019 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் வகையிலே ஜிகே வாசன் காய் நகர்த்தி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துகூறி வருகின்றனர்.