அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி திடீர் வருகை
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்ததால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் விரைவில் பேசுவார் என்றும் மருத்துவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறினர்
இந்த நிலையில் நேற்றிரவு திடீரென கருணாநிதி, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து வருகை பதிவேடில் கையெழுத்திட்டார். அவருடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர். ஒரு ஆண்டிற்கு பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதி, இன்னும் ஓரிரு நாளில் ஆர்.கே.நகருக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.