ராகுல்காந்திக்கு கமல் பாராட்டு: காங்கிரஸ் பக்கம் சாய்கிறாரா?

ராகுல்காந்திக்கு கமல் பாராட்டு: காங்கிரஸ் பக்கம் சாய்கிறாரா?

காங்கிரஸ் தலைவராக சற்றுமுன்னர் ராகுல்காந்தி பதவியேற்று கொண்ட நிலையில் பதவியேற்பு விழா நடைபெற்று கொண்டிருக்கும்போதே கமல் தனது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார்.

ரஜினி பிறந்த நாள் இரவு பத்து மணிக்கு மேல் தான் அமெரிக்காவில் 12ஆம் தேதி ஆனதாக கூறிய கமல், இன்று மட்டும் உடனே விடிந்துவிட்டதா? என்று டுவிட்டர் பயனாளிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்களை முந்திக்கொண்டு கமல் பாராட்டு தெரிவித்ததை பார்க்கும்போது, கமலுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது ஒரு கண் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கமல் கட்சி ஆரம்பிப்பது கிட்டத்தட்ட உறுதியில்லை என்றே கூறப்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply