விரைவில் இந்தியா வரும் வால்வோ XC40
ஸ்வீடன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ தனது சிறிய எஸ்.யு.வி. மாடலான XC40 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வால்வோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வால்வோ XC40 அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வால்வோ XC40 இரண்டு வித இன்ஜின்கள்: 188 பி.எச்.பி. பவர், 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் மற்றும் 245 பி.எச்.பி. பவர், 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யுனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இரண்டு வித இன்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் தளம் சார்ந்து வெளியாகும் முதல் மாடலாக XC40 இருக்கும்.
மே 2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட 40 சீரிஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய எஸ்.யு.வி. முன்பக்க கிரில் பார்க்க வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்த XC60 போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் பகலில் எரியும் தார் வடிவிலான மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, இன்டகிரேடெட் ரூஃப் ஸ்பாயிலர், டூயல் டோன் ரியர் பம்ப்பர் மற்றும் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், L-வடிவிலான டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. சென்டர் கன்சோலில் க்ரோம் ட்ரிம் மற்றும் செங்குத்தான ஏ.சி. வென்ட் மற்றும் செங்குத்தான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய வால்வோ XC40 டீசல் D4 மொமன்டம் மற்றும் இன்ஸ்க்ரிப்ஷன் வேரியன்ட்களிலும், பெட்ரோல் T5 சிங்கிள் ட்ரிம், R-டிசைன் வேரியன்ட்களில் கிடைக்கும். இந்த எஸ்.யு.வி. மாடலில் ABS, EBD, ஏர்பேக், ரேடார் சார்ந்த பாதுகாப்பு அம்சங்களான சிட்டி சேஃப்டி, பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், நேவிகேஷன் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் ஃபர்ஸ்ட் எடிஷன் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதில் ஆக்டிவ் ஹெட்லைட், பவர் டெயில்கேட் மற்றும் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய வால்வோ கம்ப்லீட்லி பில்ட் யுனிட் (CBU) வடிவில் வெளிவரும் என்றும் இதன் விலை ரூ.35 முதல் ரூ.40 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.