இந்தியா தொடர்ச்சியாக வென்ற எட்டு தொடர்கள் எவை எவை தெரியுமா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 8-வது தொடரை வென்று முத்திரை பதித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. அதில் இருந்து இந்திய அணி தொடரை இழக்காமல் தொடர்ச்சியாக 8-வது தொடரை வென்று சாதனை புரிந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 2 முறை வென்று இருந்தது. இந்த 8 தொடரில் 3 தொடர் வெளிநாட்டில் (ஜிம்பாப்வே, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை) கைப்பற்றியது. மீதியுள்ள 5 தொடரை சொந்த மண்ணில் வென்றது.
1. 2016 ஜூன் ஜிம்பாவேவுக்கு எதிரான தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி
2. 2017 பிப்ரவரி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி
3. 2017 ஜூன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றி
4.2017 ஆகஸ்ட் இலங்கைக்கு எதிரான தொடரில் 5-0 என்ற கணக்கில் வெற்றி
5. 2017 செப்டம்பர்- அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி
6. 2017 அக்டோபர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி
7. 2017 நவம்பர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி
8. 2017 டிசம்பர் இலங்கைக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி