இன்றைய ராசிபலன்கள் 19/12/2017

இன்றைய ராசிபலன்கள் 19/12/2017

மேஷம்
கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ராசி பலன்கள்

ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ராசி பலன்கள்

மிதுனம்
கணவன், மனைவிக்குள் அனுசரித்து போங்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். சகோதரங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
ராசி பலன்கள்

கடகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி பலன்கள்

சிம்மம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
ராசி பலன்கள்

கன்னி
நட்பால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ராசி பலன்கள்

துலாம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
ராசி பலன்கள்

விருச்சிகம்
குடும்பத்தில் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். பூராடம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
ராசி பலன்கள்

மகரம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ராசி பலன்கள்

கும்பம்
கணவன், மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி பலன்கள்

மீனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி பலன்கள்

Leave a Reply