டிடிவி தினகரன் வெற்றியா? உளவுத்துறை அறிக்கையால் ஆளுங்கட்சியில் பரபரப்பு

டிடிவி தினகரன் வெற்றியா? உளவுத்துறை அறிக்கையால் ஆளுங்கட்சியில் பரபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் ஒருசில ஊடகங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தினகரனே வெற்றி பெறுவார் என்று கூறி வருகின்றன

இந்த நிலையில் உளவுத்துறையின் அறிக்கையின்படியும் டிடிவி தினகரனே வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

டிடிவி தினகரன் சுமார் 65000 வாக்குகள் பெறுவார் என்றும் திமுகவிற்கு 55000 வாக்குகளும், அதிமுகவுக்கு 45000 வாக்குகளும் கிடைக்கும் என்றும் இந்த எண்ணிக்கையில் 2000 முதல் 5000 வாக்குகள் வரை மட்டுமே வேறுபட வாய்ப்பு இருப்பதால் தினகரன் வெற்றி உறுதி என்றும் கூறப்படுகிறது.

பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தலா 2000 வாக்குகள் பெறும் என்று தெரிகிறது.

Leave a Reply