ஆணாக நடித்து மூன்று பெண்களை திருமணம் செய்த பெண் கைது
ஆந்திரமாநிலம் கடப்பா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. அந்த பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வரும் இவர், ஆண்களை போன்று உடையணிவதில் விருப்பம் கொண்டவர்
இந்த நிலையில் ஆண் போல உடையணிந்து மோனிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் நடந்த மூன்றாவது நாளே அவசர வேலை காரணமாக வெளியூர் செல்வதாக கூறிய ரமாதேவி மீது மோனிகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து தன்னுடைய ஊரில் விழா நடப்பதாக கூறி அவரை தன்னுடன் அழைத்து சென்று அவரை போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் ரமாதேவி பெண் என்பதும் ஏற்கனவே இதேபோன்று இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. ஆண் என்று கூறி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது பணத்திற்கா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்கா? என்று போலீசார் தொடர்ந்து ரமாதேவியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.