ஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டசபை: தினகரனை சமாளிக்குமா அதிமுக?

ஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டசபை: தினகரனை சமாளிக்குமா அதிமுக?


பரபரப்பான நிலையில் தமிழக சட்டமன்றம் வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதி கூடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் பரபரப்பு முடிந்து அந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் விரைவில் எம்.எல்.ஏவாக பதவியேற்கவுள்ளார்.

தினகரன் ஒருவர் சட்டமன்றத்தில் நுழைந்தால் அதிமுகவுக்கு அவர் சிம்மசொப்பனமாக இருப்பார் என்று கருதப்படும் நிலையில் வரும் ஜனவரி 8ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், ஆர்.கே. நகர் தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் கூட்டத்தொடர், ஒகி புயல், பருவமழை பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரின்போது முதல்வர் பழனிச்சாமி தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என தெரிகிறது.

Leave a Reply