வாராக்கடன் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

வாராக்கடன் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் உள்ள வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்த சர்வே ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து அதன் முடிவை சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி அதிக வாராக்கடன் உள்ள நாடுகளில் முதலிடத்தில் கிரீச் உள்ளது. இதனையடுத்து இத்தாலி, போர்ச்சுகல், இத்தாலி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்த பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் பொருளாதார பாதிப்பிற்கு இந்த வாராக்கடன் முக்கிய காரணம் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தர நிர்ணய நிறுவனமான ‘கேர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் பி.ஐ.ஐ.ஜி.எஸ் நாடுகளில் அதிக அளவில் வாராக்கடன் பெற்ற நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது என்றும், இந்த தொகை சதவிகிதத்ஹ்டில் 9.85% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் 2%க்கும் குறைவாக வாராக்கடன் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply