இரண்டு ரூபாய்க்கு நாப்கின்: செடிகளில் இருந்து தயாரித்து சாதனை செய்த கோவை மாணவர்கள்

இரண்டு ரூபாய்க்கு நாப்கின்: செடிகளில் இருந்து தயாரித்து சாதனை செய்த கோவை மாணவர்கள்

கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் கேனாக் என்ற செடிகளில் இருந்து சுகாதாரமான ,பக்கவிளைவுகள் இல்லாத நாப்கின்களை தயாரித்து சாதனை செய்துள்ளனர். இந்த மாணவர்களின் சாதனைக்கு மத்திய அரசின் தேசிய விருது கிடைத்துள்ளது.

கேனாக் என்ற செடியை வேறு ஒரு ஆய்வுக்காக வளர்த்தபோது அதில் உறிஞ்சும் தன்மை அதிகம் இருந்ததை கண்டுபிடித்ததாகவும், இதனால் இந்த செடிகளில் இருந்து நாப்கின்கள் தயாரித்தால் பக்கவிளைவு இல்லாத அதே நேரத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு அளிக்கலாம் என்ற காரணத்தை இதை தயாரித்ததாக மாணவர்கள் கூறினர்

இந்த நாப்கின்கள் ரூ.2 முதல் ரூ.4 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்துள்ளதால் கிராமத்து பெண்கள் வரை இவை சென்று சேரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தற்போது மார்க்கெட்டில் உள்ள நாப்கின்கள் செயற்கையான பிளாஸ்டிக் மற்றும் வேதிப்பொருள்கள் இருப்பதாகவும், ஆனால் இந்த மாணவர்களின் தயாரிப்பு முழுக்க முழுக்க இயற்கை முறையில் ஆனது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply