லைபீரியா நாட்டின் அதிபர் ஆவாரா முன்னாள் கால்பந்து வீரர்?
நடிகர், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஒரு நாட்டின் அதிபராகி வரும் நிலையில் லைபீரியா நாட்டில் கால்பந்து வீரர் ஒருவர் அதிபராகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த லைபீரியா பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேக் தலைமையிலான கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இவர் லைபீரியாவின் புதிய அதிபராகிறார். இவர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2002-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து தீவிர அரசியலில் நுழைந்து லைபீரியா பாராளுமன்றத்தில் செனட்டர் ஆனார். இவர் வெற்றியை அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் லைபீரியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.