பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் அனல் பறக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையேயான உறவுநிலை சரியில்லாததால் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பில்லை என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேலும் கூறியபோது, ‘பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளாதவரை, அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

எனவே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தவிர வேறு கிரிக்கெட் போட்டிகள் இருநாடுகளுக்கு இடையே இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply