ரஜினியை அடுத்து கமலும் அரசியல் அறிவிப்பு: இன்று அவசரமாக நாடு திரும்புகிறாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வரும் பொங்கல் தினத்திற்குள் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ரஜினியுடன் தொழில் போட்டியாளராக இருந்த கமல், தற்போது அரசியல் போட்டியாளராகவும் மாறுகிறார்
விஸ்வரூபம் 2′ படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த கமல், ரஜினியின் அரசியல் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்து இன்று நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று சென்னை திரும்பும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கிறார். பின்னர் வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் சென்னை திரும்பியவுடன் கட்சியின் பெயரை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இருவரும் கிட்டத்தட்ட ஒரே நாளில் கட்சியின் பெயரை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை