அரசியலிலும் ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிவிடாதீர்கள்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தேவையில்லாமல் விமர்சனம் செய்து அவரை பெரிய ஆளாக்கிவிட வேண்டாம் என்றும், அவர் சினிமாவில் மட்டும்தான் சூப்பர் ஸ்டார். அவரை விமர்சனம் செய்வதன் மூலம் அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக்கிவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் குறித்து அதிமுக அமைச்சர்கள் உள்பட பலர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியை விமர்சனம் செய்ய செய்ய அவருக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதாக உளவுத்துறை அறிக்கை ஒன்று வந்துள்ளதாம்
எனவே ஜினியை விமர்சனம் செய்வதால் அவருக்கு மக்களுக்கு மீது ஈர்ப்பு தான் உண்டாகுமே தவிர, வெறுப்பு உண்டாகாது என்றும் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக்கிவிட வேண்டாம் என்றும் அதிமுக அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி கட்டுப்பாடு விதித்துள்ளார்.