போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 என்ற ஊதிய காரண கோரப்பட்ட நிலையில், 2.44 மட்டும் தர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ போன்ற போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கின. பேருந்துகள் இயக்கப்படாமலும், ஆங்காங்கேயும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 2.44 என்ற ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று, போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்தத்தால் பெரும் பாதிப்பு இருக்காது. அண்ணா தொழிற்சங்கத்தின் 70% உறுப்பினர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் 32 தொழிற்சங்கங்கள் 2.44 ஊதிய காரணிக்கு ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply