ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கில் பணம் மாயம்: அதிர்ச்சி தகவல்

ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கில் பணம் மாயம்: அதிர்ச்சி தகவல்

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மாயமானதாக புகார்கள் வந்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் எண்ணை, பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் துறை சலுகைகளைப் பெற கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வாடிக்கையாளர்களை ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ஆதார் எண் கட்டாயம் என்ற வற்புறுத்தல் நின்ற பாடில்லை. அதில் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைக்க தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

அவ்வாறு இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மாயமாகியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,

* ஆந்திரா வங்கி – ரூ.4,20,098 மாயம்

* சிண்டிகேட் வங்கி – ரூ.1,21,500 மாயம்

* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – ரூ.5.89 லட்சம் மாயம்

* எஸ்.பி.ஐ – ரூ.80,500 மாயம்

* யூகோ வங்கி – ரூ.92,250 மாயம்

இதுதொடர்பாக பதிலளித்துள்ள இந்திய தனிநபர் அடையாள ஆணையம், எந்தவித தகவலும் தங்களிடமிருந்து திருடப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது. எனவே வங்கிகளின் இணையதளச் சேவைகள் தான், பணம் மாயமானதற்கு பொறுப்பு என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply