சுவிஸ் நாட்டில் டிரம்ப்-மோடி சந்திப்பு நடக்குமா?

சுவிஸ் நாட்டில் டிரம்ப்-மோடி சந்திப்பு நடக்குமா?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார கருத்தரங்கு இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொள்வதால் இந்த மாநாட்டின்போது டிரம்ப்-மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று உலக தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளதை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். இதில் அமெரிக்க வணிகம், அமெரிக்க தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் பற்றி பேசவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக 22-ம் தேதி சுவிட்சர்லாந்து செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஆலைன் பெர்செட் உடன் சந்தித்து பேசுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி இதில் பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply